சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, சௌதி அரேபியா, ஜோர்டான், எகிப்து, இந்தோனேசியா, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைச் செயலாளர் அடங்கிய பிரதிநிதிக் குழுவினருடன் நவம்பர் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வாங்யீ கூறுகையில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் சட்டப்பூர்வ உரிமை நலன்களை சீனா எப்போதுமே உறுதியுடன் பேணிக்காத்து வருகிறது. அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து, காசா பிரதேசத்தில் போர் நிறுத்துவது, மனித நேய நேருக்கடியைத் தணிவு செய்வது, பிணைக் கைதிகளை விடுவிப்பது, பாலஸ்தீனப் பிரச்சினையின் தீர்வை முன்னேற்றுவது ஆகியவற்றுக்கு முயற்சிகளை மேற்கொள்ள சீனா விரும்புகிறது என்றார்
பாலஸ்தீனப் பிரச்சினையில் சீனாவின் நியாயமான நிலைப்பாட்டுக்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நெருக்கடியின் பரவலைத் தடுத்து, அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்கும் விதம் சீனாவுடன் மேலும் நெருங்கிய ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.
மேலும், காசா பிரதேச நெருக்கடி மற்றும் பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சீனாவின் முன்மொழிவை வாங்யீ முன்வைத்தார். ஐ.நா பாதுகாப்பவை மற்றும் பொது பேரவையின் தொடர்புடைய தீர்மானத்தைப் பன்முகங்களிலும் செயல்படுத்தி, போர் நிறுத்தம் செய்ய வேண்டும். சர்வதேச சட்டம் குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்.
பாலஸ்தீனத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடைய முடிவுகள் அந்நாட்டு மக்களின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும். அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் விருப்பங்களை ஐ.நா பாதுகாப்பவை கேட்டறிய வேண்டும் என்று இம்முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.