திருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா உச்சநிகழ்ச்சியாக சட்ட தேரோட்டம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்கந்த சஷ்டி திருவிழா கடந்த 12 ந் தேதிகாப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 17ந்தேதிபில் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிகர நிகழ்ச்சியாக நேற்று 30 முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனம்பிகையிடம் இருந்து பெற்ற சக்திவேல் கொண்டு சூரனை வதம் செய்த சூரசம்ஹாரம் லீலை நடந்தது.

இதனைத் தொடர்ந்து கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானை மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக இன்று சட்ட தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி கோவில் வாசல் முன்பு சட்டத்தேர் தயாராக இருந்தது.
இந்த நிலையில் உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்கசர்வ அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கமயில்வாகனத்தில் அமர்ந்து புறப்பட்டு வந்துசட்டத் தேரில் அமர்ந்தார். உடனே அங்கு கூடியிருந்தஏராளமான பக்தர்கள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா, விர வேல்முருகனுக்கு அரோகரா என்று பக்திகோஷங்கள் எழுப்பி படி சட்டத்தேரின் வடத்தினைபிடித்து இழுத்தனர்.
இந்த சட்டத்தேரானது சன்னதி தெரு வழியாக கீழ ரதி வீதி, பெரிய ரதவீதிவழியேமலையை சுற்றி வந்துமேலரத வீதி,சன்னதி தெரு வழியே நிலைக்குவந்தது இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் கைகளில்கட்டி இருந்த காப்புகளை கழற்றி அவரவர் ஊருக்கு சென்றனர்.செய்தியாளர் வி காளமேகம்